‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக நடத்துநர் மீது பொய் புகார்: ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக நடத்துநர் மீது பொய் புகார் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Published On :

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக நடத்துநர் மீது பொய் புகார் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருபவர் வேலையன். இவர் அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது அதிகாரிகள் பொய் புகார் அளித்துள்ளதாக கூறி புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிமனையில் அனைத்து பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை முதல் எந்த பேருந்துகளும் இயக்கப்படாததால் கிராமப்பகுதிகளில் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புகாரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பணிமனை முன்பு பேருந்து நடத்துநர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.