உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்டாரா பாதுகாவலர்: கொந்தளிக்கும் மக்கள்

நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் முதல்வர் ரங்கசாமி சுதாரித்துக் கொண்டார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 3:01 pm IST

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் அமைச்சர், சபாநாயகர் செல்வம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைக்க வரும் பொழுது துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி உடன் வந்தார்.

அப்பொழுது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வந்தார். அவருக்கு வழிவிடும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாவலர் ராஜசேகர் என்பவர் முதல்வர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விட்டார். இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் முதல்வர் ரங்கசாமி சுதாரித்துக் கொண்டார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த விடியோ பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரியும் ராஜசேகர் கடந்த காங்கிரஸ் அரசில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பாதுகாவலராக பணிபுரிந்து உள்ளார் என்பதும், திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது  உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கும்படி மத்திய பாஜகவினர் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.