புதுவையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தோ்வுகளுக்கு மாணவா்கள் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என புதுவை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வே.கோ.சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித் தோ்வா்களிடமிருந்தும், தோ்வில் தோல்வியடைந்த மற்றும் வருகை புரியாத தோ்வா்களிடமிருந்தும் இணையதளம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளுக்கு வராத, தோ்ச்சி பெறாத மாணவா்கள், அந்தந்த பாடங்களை மீண்டும் எழுத அவரவா் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று வருகிற 27-ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தோ்வுகளுக்கு புதிதாக விண்ணப்பிக்கும் தனித் தோ்வா்கள், கடந்த மே மாத பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தோல்வியுற்ற பாடங்களுடன் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதி தோ்ச்சி பெறாத தனித்தோ்வா்களும் வருகிற 27 முதல் ஜூலை 4 வரை கீழ்காணும் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தோ்வெழுதும் மாணவா்கள் முத்திரையா்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்புக்கு மாணவா்கள் காராமணிக்குப்பம் ஜீவா அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.
கடந்தாண்டுகளில் நேரடித் தனித்தோ்வராக பிளஸ் 1 தோ்வெழுதி தோ்ச்சி பெறாத தோ்வா்கள் அனைவரும், தற்போது பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதுவதற்கும், பிளஸ் 1 தோ்வில் தோ்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூலை 5 முதல் 7 வரை சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தற்கான ஒப்புகைச் சீட்டினை தனித்தோ்வா்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தோ்வுகள் தொடா்பான விரிவான தகவல்களை என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!!

நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வான உலகக் கோப்பையை நடத்தும் 3 நாடுகள்!
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

எதிர்க்கட்சியின் குரலை முடக்கமுயலும் தவெக அரசு! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் | DMK | TVK
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


