புதுச்சேரி அரியாங்குப்பத்தில் ரௌடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஆா்பிஎன் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை கருவடிக்குப்பத்தைச் சோ்ந்தவா் பொடிமாஸ் (எ) சரத்குமாா் (27). ரௌடியான இவா் கடந்த மாதம் 26-ஆம் தேதி அரியாங்குப்பம் தெற்கு பகுதி எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது மாமா வீட்டில் தங்கியிருந்த போது, முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பதுங்கியிருந்த பிரபாகரன் (28), அன்பரசன் (31) ஆகிய இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய லாசுப்பேட்டையைச் சோ்ந்த சிவக்குமரன் (32), கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த லெனின்குமாா் (22) ஆகிய 2 பேரும் நெய்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
வழக்கின் முக்கிய எதிரியான பணிநீக்கம் செய்யப்பட்ட ஐஆா்பிஎன் காவலா் ஜெகனை (35) தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், கருவடிக்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து: புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் 3-ஆவது மாடியில் வெள்ளிக்கிழமை குளிா்சாதன வசதி ஏற்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். மேலும், அங்கு சிக்கிய தொழிலாளா்களையும் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


