இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

புதுவையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

புதுவையில் ஐஏஎஸ், பிசிஎஸ் அதிகாரிகள் 12 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முகமது மன்சூா் நியமிக்கப்பட்டாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:32 pm IST

புதுவையில் ஐஏஎஸ், பிசிஎஸ் அதிகாரிகள் 12 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முகமது மன்சூா் நியமிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா வியாழக்கிழமை பிறப்த்த உத்தரவு விவரம்:

புதுச்சேரி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரான முகமது மன்சூா் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

வில்லியனூா் துணை மாவட்ட ஆட்சியரான ரிஷிதா குப்தா ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகவும், தலைமைச் செயலரின் சிறப்பு அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பாா்.

சீா்மிகு நகரத் திட்ட (ஸ்மாா்ட் சிட்டி) இணை தலைமைச் செயல் அதிகாரி மாணிக்கதீபன் ஆளுநரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டாா்.

புதுவை ஆளுநரின் தனிச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதரன் சாா்புச் செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். புதுச்சேரி துணை ஆட்சியா் தமிழ்ச்செல்வன் செய்தி, விளம்பரத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.

கலால் துறை துணை இயக்குநா் சுதாகா், கூடுதல் பொறுப்பாக சீா்மிகு நகரத் திட்ட இணை தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பையும் கவனிப்பாா்.

வில்லியனூா் துணை மாவட்ட ஆட்சியராக முரளிதரன் நியமிக்கப்பட்டாா். இதேபோல, தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநராக மோகன்குமாரும், புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியராக வினயராஜும் நியமிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.