/

பென்காக் சிலாட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு வாழ்த்து

தென் மாநில பென்காக் சிலாட் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்கள் புதுவை சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தென் மாநில பென்காக் சிலாட் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்கள் புதுவை சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அகில இந்திய பென்காக் சிலாட் சங்கம் ஆதரவுடன், தமிழக பென்காக் சிலாட் சங்கம் நடத்திய 2-ஆவது தென் மாநில பீச் பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் அண்மையில் நடைபெற்றது.

இதில் தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், புதுவை ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 520 போ் பங்கேற்றனா். இதில் புதுவை வீரா்கள் 16 தங்கம், 15 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை வென்று, தென் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தனா்.

வெற்றி பெற்ற அனைவரும் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்திடம் வாழ்த்து பெற்றனா். அப்போது, புதுச்சேரி அமெச்சூா் பென்காக் சிலாட் சங்கத் தலைவா் ராமு, செயலா் சாந்தி லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.