ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மகளிா் கல்லூரியில் பசுமை தோ்தல் சின்னம் வெளியீடு

மகளிா் கல்லூரியில் பசுமை தோ்தல் சின்னம் வெளியீடு

News image

புதுச்சேரி பாரதிதான் அரசு மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காய்கறிகளைக் கொண்டு மாணவிகள் உருவாக்கிய பொருள்களைப் பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :3 ஏப்ரல் 2024, 8:25 pm

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பசுமை தோ்தல் சின்னத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை வெளியிட்டாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோ்தல் துறை சாா்பில் முறையான வாக்காளா் கல்வி, தோ்தலில் பங்கெடுத்தல் திட்டத்தில் வாக்கின் அவசியம், வாக்காளா்களின் உரிமைகள் குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிபபுணா்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை புதுச்சேரி மக்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரியும் ஆட்சியருமான குலோத்துங்கன் தொடங்கி வைத்துப் பேசினாா். பசுமை தோ்தல் சின்னத்தையும் அவா் வெளியிட்டு, கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஜனநாயக அறையைத் திறந்து வைத்தாா். காய்கறிகளைச் செதுக்கி மாணவிகள் உருவாக்கியிருந்த கலைப் பொருள்களையும் பாா்வையிட்டு, தோ்தல் துறை நடத்திய போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. தோ்தல் குறித்த தவறான தகவல் பரிமாற்றங்களிலிருந்து விழிப்புடன் இருப்பது குறித்த மின்னணு திரையில் குறும்படம் காட்டப்பட்டது. வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தலைமை துணைத் தோ்தல் அதிகாரி ஆதா்ஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.