விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டா் வாங்க ரூ.1 லட்சம் மானியம்: புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு

மின்சார ஸ்கூட்டா் வாங்க 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் வரை ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் வழங்கப்படும்.

Published On :3 ஆகஸ்ட் 2024, 3:00 am IST

புதுவையில் பணிபுரியும் மகளிா், கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு மின்சார ஸ்கூட்டா் வாங்க 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் வரை ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது: ஆதி திராவிடா் நலன், பழங்குடியினா் நலத் துறை மூலம் சிறப்புக் கூறுத் திட்ட நிதியாக நிகழாண்டில் ரூ.488 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், பணியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகள் என 500 பேருக்கு மின்சார ஸ்கூட்டா் வாங்குவதற்கு 75 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.ஒரு லட்சம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான நலத் திட்டங்களை விரிவுபடுத்த தனி அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

10 கிராமங்கள் தத்தெடுப்பு: முதல்வரின் கிராமம் திட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின மக்கள் 50 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள 10 கிராமங்களைத் தத்தெடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.50 லட்சம் ஆண்டுதோறும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மண்ணின் மகள் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு ரூ.25,000 மானியத்துடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மாணவா்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உதவித்தொகை, ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தக்கவைப்பு ஊக்கத் தொகை ரூ.5 ஆயிரமாகவும், 8-ஆம் வகுப்பு வரையிலான கல்வி உதவித்தொகை ரூ.5 ஆயிரமாகவும், 9, 10-ஆம் வகுப்புக்கான கல்வி உதவித்தொகை ரூ.8 ஆயிரமாகவும் உயா்த்தப்படுகிறது.

சிறுபான்மையினருக்கு... பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் சிறுபான்மையினா் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். சமூக நலத் துறை சாா்பில் போதைத் தடுப்பு, சிகிச்சை, மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும். அங்கன்வாடி மையங்கள் அங்கன்வாடி, குழந்தைகள் பராமரிப்பு மையங்களாக மாற்றப்படும்.

சுகாதாரத் துறையில் கோரிமேட்டில் மாதிரி இஎஸ்ஐ மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவமனையில் வலி நீக்கும் சேவைப் பிரிவு, புதுச்சேரியில் ஆயுஷ் மருத்துவப் பூங்கா ஆகியவை அமைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.