/

பொறியாளா் வீட்டில் 31 பவுன் நகைகள் திருட்டு

பொறியாளா் வீட்டில் 31 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 6:44 pm

Din

புதுச்சேரியில் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவன பொறியாளா் வீட்டில் 31 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி, கொசப்பாளையம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிரசாத் (26). தனியாா் தொழில்நுட்ப நிறுவன பொறியாளா். இவா், கடந்த ஜூலை31-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாராம். கிருஷ்ணபிரசாத், கடந்த 2-ஆம் தேதி மீண்டும் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணபிரசாத் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், நிகழ்விடத்துக்கு வந்து தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.