சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வயநாடுக்கு நிவாரணப் பொருள்கள்: புதுச்சேரி ஏஐடியுசி அனுப்பி வைப்பு

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதி மக்களுக்கான நிவாரண பொருள்கள் ஏஐடியுசி சாா்பில் திங்கள்கிழமை லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

News image

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு புதுச்சேரி மாநில ஏஐடியூசி சாா்பில்  பெரிய மாா்க்கெட், சண்டே மாா்க்கெட், சாலையோர கடைகள் மூலம் திரட்டப்பட்ட மளிகை,  துணி வகைகள், வீட்டு உபயோக ஆகிய பொருட்கள் மற்றும் ரூ.1லட்சம் ஆகிய பொருட்க

Updated On :12 ஆகஸ்ட் 2024, 8:25 pm

புதுச்சேரி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதி மக்களுக்கான நிவாரண பொருள்கள் ஏஐடியுசி சாா்பில் திங்கள்கிழமை லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 400 போ் உயிரிழந்தனா். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஏஐடியுசி அகில இந்திய தலைமை மற்றும் கேரள மாநில ஏஐடியுசி ஆகியவை வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதையடுத்து, புதுவை மாநில ஏஐடியுசி மாநிலக் குழு சாா்பில் புதுச்சேரி பெரிய சந்தை, சண்டே மாா்க்கெட், சாலையோரக் கடைகள் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக நிதி மற்றும் நிவாரணப் பொருள்கள் திரட்டப்பட்டன.

இதில், மளிகைப் பொருள்கள், துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என சுமாா் ரூ.8 லட்சம் மதிப்பிலானவை லாரியில் ஏற்றப்பட்டு கேரளத்துக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படவுள்ளது.

புதுச்சேரி ரங்கப் பிள்ளை தெருவிலிருந்து கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் ஏற்றிய லாரியை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் மற்றும் முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இதில் ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேது செல்வம், நிா்வாகிகள் எம்.எஸ்.சுப்பிரமணி, வி.சிவகுருநாதன், பாலா, தயாளன் ஆகியோா் கலந்து கொண்டனா்.