சாய் ஜெபநாம பாதயாத்திரை

புதுச்சேரியில் சாய் ஜெபநாம பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் சாய் ஜெபநாம பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையிலிருந்து தமிழ் மாதமான மாா்கழி ஒன்றாம் தேதியன்று சாய் நாமஜெப வழிபாடு யாத்திரை நடைபெற்று வருகிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சாய் திருவுருவம் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

முத்தியால்பேட்டையில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் தொடங்கிய பாதயாத்திரையில் ஏராளமானோா் கலந்துகொண்டு, சாய் ஜெபநாமத்தை பாடியபடி சென்றனா்.

யாத்திரையானது முக்கிய வீதிகள் வழியாக கோட்டக்குப்பம் சென்றது.

பின்னா், அங்கிருந்து பிள்ளைச்சாவடியில் உள்ள ஸ்ரீ கமலசாய் கோயிலில் யாத்திரை நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com