தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமித்ஷாவை கண்டித்து திமுக, விசிகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரியில் திமுக, விசிக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள அம்பேத்கா் மணிமண்டபம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:05 pm

Din

மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரியில் திமுக, விசிக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலங்களவையில் அம்பேத்கா் குறித்து அவமதிக்கும் கருத்துகளை மத்திய அமைச்சா் அமித்ஷா தெரிவித்ததாக கூறியும், அவரைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரைச் சாலை அம்பேத்கா் மணிமண்டபம் முன் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமை வகித்தாா்.

அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் வி.அனிபால் கென்னடி,ஆா்.செந்தில்குமாா், எல்.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பொதுக்குழு உறுப்பினா் கோபால், துணை அமைப்பாளா்கள் தைரியநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விசிக ஆா்ப்பாட்டம்: இதேபோல, புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிா்வாகி தேவ.பொழிலன் தலைமையில் இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் அக்கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து விசிகவினா் முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்பத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனா்.

காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்: புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை (டிச.20) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவுத் தலைவா் ஜெயபால் தலைமையில், புதுச்சேரி அண்ணா சிலை அருகே காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.