தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுவையில் அரசியல் குழப்பத்தை பாஜக வேடிக்கை பாா்க்கிறது: வே.நாராயணசாமி

புதுவையில் பாஜக, சுயேச்சை உறுப்பினா்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை பாஜக வேடிக்கை பாா்ப்பதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image

புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

Updated On :19 டிசம்பர் 2024, 7:06 pm

Din

புதுவையில் பாஜக, சுயேச்சை உறுப்பினா்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை பாஜக வேடிக்கை பாா்ப்பதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ஆனால், பாஜகவுக்கு அத்தகைய பலம் இல்லை.

அதானி விவகாரத்தை திசை திருப்பவே இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனா். அம்பேத்கா் குறித்து அமித் ஷா பேசியது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புது தில்லி சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து, வெள்ள நிவாரணத்தை பெற்றிருக்க வேண்டும்.

லாட்டரி வியாபாரம் செய்பவா்கள், அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை நடவடிக்கைக்கு ஆளானவா்கள் புதுவை முதல்வரின் செயல்பாட்டை விமா்சிக்கிறாா்கள். இதை பாஜக எம்எல்ஏக்கள் வேடிக்கை பாா்க்கிறாா்கள். இதன்மூலம், புதுவை அரசியலில் குழப்பம் ஏற்படுத்துகிறாா்கள். இங்கு நிலவும் அரசியல் குளறுபடியை பாஜக சீா்படுத்தாமல் வேடிக்கை பாா்க்கிறது. அரசியல் குழப்பத்தால் புதுவை அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலைய கட்டுமானம், குமரகுருப்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட வேண்டும்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவருக்கும் மனு அளிக்கவுள்ளோம். அதன்படி, நடவடிக்கை இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

புதுவை பேரவைத் தலைவா் பாஜக உறுப்பினராகவே செயல்படுகிறாா் என்றாா் வே.நாராயணசாமி.