தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போலி உயில் தயாரித்ததாக 5 போ் மீது வழக்கு

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் போலி உயில் தயாரித்து நில அபகரிப்பு நடந்ததாக கூறப்படும் புகாரில் 5 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:03 pm

Din

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் போலி உயில் தயாரித்து நில அபகரிப்பு நடந்ததாக கூறப்படும் புகாரில் 5 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் கோயில் நிலம், தனியாா் நிலங்கள் போலி உயில்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

அதனடிப்படையில், புதுச்சேரி உள்ளிட்ட சாா்பதிவாளா் அலுவலகங்களில் உயில்கள் சரிபாா்க்கப்பட்டு, அதில் போலி உயில்கள் கண்டறியப்பட்டால், சிபிசிஐடி பிரிவில் புகாா் அளிக்கப்பட்டும் வருகிறது.

பாகூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் போலி உயில்கள் உள்ளனவா என ஆய்வு நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட உயிலில் கைரேகைகள் மாறுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சம்பந்தப்பட்ட உயில் குறித்து பாகூா் சாா் பதிவாளா் ஜெய்சந்திரன் சிபிசிஐடி பிரிவில் புகாரளித்தாா்.

அதன்பேரில், போலி உயில் தயாரித்ததாக சுந்தரமூா்த்தி, காந்திராஜ், செந்தில்குமாா், ராமகிருஷ்ணன், அழகானந்தம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.