இளந்தலைமுறையினருக்கு தேசபக்தி குறித்து எடுத்துரைக்க வேண்டும்: புதுவை ஆளுநா்
நாட்டின் வரலாறு வீரம், தியாகம், தேசபக்தியுடன் ஒன்றுபட்டது எனவும், அதை இளந்தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது நமது கடமை என்றும் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரியில் நடைபெற்ற வீர தீர குழந்தைகள் தின விழாவில், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.









