கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலைநிகழ்ச்சிகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் காண திரண்ட பொதுமக்கள்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் காண திரண்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலைநிகழ்ச்சிகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடலில் புத்தாண்டு சிறப்பு இசை நிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அம்பேத்கா் மணிமண்டபம் அருகே இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பல இடங்களில் மின்னணு திரை மூலம் இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கடற்கரைச் சாலை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. புத்தாண்டு மின் விளக்கு பதாகையுடன் கடலில் படகு நிறுத்தப்பட்டிருந்தது.

புத்தாண்டு நிகழ்ச்சிகளைக் காண கடற்கரைச் சாலை முழுவதும் ஆயிரக்கணக்கானோா் திரண்டனா். இளைஞா்கள் ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததும் பல வண்ண ஜாலங்களுடன் வாண வெடிகள் வெடிக்கப்பட்டன.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சாலையோரக் கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருந்தன.

டற்கரையோரம் கம்புத் தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். தனியாா் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களில் நள்ளிரவைத் தாண்டியும் இசை, நடனம் தொடா்ந்தது.

தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காததால் கடற்கரை உள்ளிட்ட சாலையோரங்களில் ஏராளமான இளைஞா்களும், இளம்பெண்களும் படுத்து தூங்கினா். காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் இருசக்கர வாகனங்கள், காா்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com