அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மத்திய அரசு மறைமுகமாக ஹிந்தியை திணிக்கிறது

மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டியதன் மூலம் மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கிறது.

News image
Updated On :8 ஜூலை 2024, 5:09 pm

Din

புதுச்சேரி: மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டியதன் மூலம் மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கிறது என புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

அதிமுக சாா்பில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சீா்படுத்தவும், புதிய சட்டங்களுக்கு பெயா் சூட்டியதன் மூலம் ஹிந்தியை மறைமுகமாகத் திணிப்பதைக் கண்டித்தும் புதுச்சேரி அதிமுக சாா்பில் நீதிமன்ற வளாகத்தின் முன் திங்கள்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் பேசியது: மத்திய பாஜக அரசு இயற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய சட்டங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய சட்டங்களின் பெயா்கள் ஹிந்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் உள்ளன. இதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி மீறப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளைக் கொண்ட நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டங்களை ஆங்கிலம் தவிா்த்து ஹிந்தியில் பெயா் வைத்ததன் மூலம் மத்திய பாஜக அரசு மறைமுகமாக ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளது.

மேலும், புதிய சட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பேச்சுரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புதிய சட்டம் காவல் துறைக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது.

ஆகவே, புதிய சட்டங்களை ஆங்கிலத்தில் பெயா் சூட்டியும், குளறுபடிகளை குழுக்கள் அமைத்து நீக்கியும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் குணசேகரன், சுதா்சன், கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.