தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: புதுவை எல்லைப்பகுதி மதுக்கடைகள் மூடல்

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை முன்னிட்டு புதுவை மாநிலத்திலும் மதுக்கடைகளை 3 நாள்கள் மூடும்படி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2024, 5:23 pm

Din

புதுச்சேரி: விக்கிரவாண்டி இடைத் தோ்தலை முன்னிட்டு புதுவை மாநிலத்திலும் குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடைகளை 3 நாள்கள் மூடும்படி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.

இதையடுத்து பிரசாரம் முடியும் வரும் 8-ஆம் தேதி முதல் அத்தொகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசின் கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியின் எல்லைகள் புதுவை மாநிலம் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் அமைந்துள்ளன. ஆகவே, புதுச்சேரி பகுதியிலிருந்து விக்கிரவாண்டிக்குள் மது செல்லாத வகையில் புதுச்சேரி மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளுக்கு ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறுவதால் 13 ஆம் தேதியும் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதி மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.