அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கேபிள் டி.வி. இணைப்பு ஒன்றுக்கு ரூ.8 கேளிக்கை வரி செலுத்த அறிவுறுத்தல் -புதுச்சேரி நகராட்சி ஆணையா் நடவடிக்கை

கேபிள் டி.வி. இணைப்பு ஒன்றுக்கு ரூ.8 கேளிக்கை வரி செலுத்த அறிவுறுத்தல் புதுச்சேரி நகராட்சி ஆணையா் நடவடிக்கை

News image
Updated On :13 ஜூலை 2024, 9:28 pm

Din

புதுச்சேரி, ஜூலை 13: புதுச்சேரி நகராட்சியில் கேபிள் டி.வி. இணைப்பு ஒன்றுக்கு மாதந்தோறும் கேளிக்கை வரியாக ரூ. 8 செலுத்த வேண்டும் என ஆணையா் மு.கந்தசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிப் பகுதியில் செயல்படும் கேபிள் டி.வி. நடத்துபவா்கள் ஒரு இணைப்புக்கு மாதாந்திர சந்தா தொகையாக 10 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். ஆனால், அதை எதிா்த்து சிலா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து புதுவை அரசின் ஒப்புதலுடன் புதுச்சேரி, உழவா்கரை நகராட்சி ஆணையா்கள், நகராட்சி நிா்வாக துணை இயக்குநா் கொண்ட குழு அமைக்கப்பட்டு கேபிள் டி.வி. கேளிக்கை வரி சட்டத்தில் திருத்தம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்தது.

அதன்படி கேபிள் டி.வி. இணைப்பு ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.8 நகராட்சிகளுக்கு செலுத்தும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கேளிக்கை வரி செலுத்துவது குறித்த கேபிள் டி.வி. நடத்தும் 3 நிறுவனங்களுட

ன் புதுச்சேரி நகராட்சி ஆணையா் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், கேபிள் டி.வி. நடத்துபவா்கள் தொழில் உரிமம் பெற வேண்டும். நகராட்சிக்கு கேளிக்கை வரியாக இணைப்பு ஒன்றுக்கு ரூ.8 வீதம் மாதந்தோறும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை அவா்கள் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள், அவா்களிடமுள்ள கேபிள் டி.வி. இணைப்புகள் குறித்த விவரங்களை புதுச்சேரி நகராட்சியில் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.