ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுச்சேரியில் இன்று பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்

புதுச்சேரியில் இன்று பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்

News image
Updated On :13 ஜூலை 2024, 9:28 pm

Din

புதுச்சேரி, ஜூலை 13: புதுச்சேரியில் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதில், மத்திய, மாநில அமைச்சா்கள் கலந்து கொள்கின்றனா்.

புதுவை மாநிலத்தில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதில், பாஜக சாா்பில் பேரவைத் தலைவா்,

2 அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தோ்தலில்

போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் தோல்வியடைந்தாா்.

இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் ஆகிய 7 போ் முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோரை விமா்சித்தும், புதுதில்லி சென்று கட்சி மேலிடத்தில் புகாா் அளித்தும் உள்ளனா்.

பாஜக எம்எல்ஏ-க்கள், ஆதரவு சுயேச்சைகளின் விம

ா்சனம் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி.யிடம் முதல்வா் என்.ரங்கசாமி தனது கருத்தைத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து புதுச்சேரி வந்த கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினாா்.

இந்தநிலையில், புதுவை பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் புதுச்சேரி முதலியாா்பேட்டை மரப்பாலம் சந்திப்பு அருகேயுள்ள தனியாா் மகாலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமை வகிக்கிறாா். இதில் மத்திய அமைச்சா் கிஷ் ரெட்டி, புதுவை அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், பாஜக எம்எல்ஏ-க்கள், முக்கிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். இந்தக் கூட்டம் 6 அமா்வுகளாக நடத்தப்படவுள்ளதாகவும், அதில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் மக்களவைத் தோ்தல் தோல்வி உள்ளிட்ட விவகாரங்களை விரிவாக பேசுவதுடன், கட்சி வளா்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.