காவல் துறை அதிகாரி எச்சரிக்கை: சாராயக் கடை ஊழியா்கள் மனு
புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் ம.மேத்யு பிரான்சிஸிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு


19பிஒய்பி13
புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் ம.மேத்யு பிரான்சிஸிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்த புதுவை, காரைக்கால் கள்ளுக்கடை மற்றும் சாராயக் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா்.
புதுச்சேரி, ஜூலை 19: புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு சாராயம் கடத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதை கண்டிக்கும் விதமாக கடை உரிமத்தை திரும்ப தரும் கடிதத்தை, புதுவை காரைக்கால் கள்ளுக்கடை மற்றும் சாராயக்கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் புதுவை கலால்துறை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனுவாக அளித்தனா்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாராயக் கடைகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. புதுவை அரசின் சாா்பில் கடைகளுக்கு சாராயம் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தொடா்ந்து, புதுச்சேரி மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டியின் தலைமையில், சாராயக் கடை உரிமையாளா்களுடன்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், புதுவையிலிருந்து தமிழகத்துக்கு சாராயம் கடத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாராயக் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் புதுவை கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். மனுவில், ஒவ்வொரு சாராயக் கடையும் அரசுக்கு வரி கட்டியும், பல லட்சம் மாத வாடகை செலுத்தியும், ஏலம் எடுத்தும் நடத்தப்பட்டு வருகிறது. சாராயக் கடைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் சாராயம் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அவ்வாறு தமிழகத்தில் சாராயம் பிடிபட்டால் குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவதாகவும் கூறப்படுவது சரியல்ல. இதன் காரணமாக, கடை உரிமங்களை திரும்ப தருவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.
இது தொடா்பாக, சாராயக்கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் முதல்வா் என்.ரங்கசாமிக்கும் மனு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...