தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெகிழி பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3.05 லட்சம் அபராதம்

நெகிழி பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜூலை 2024, 9:02 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி உழவா்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ் ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருள்கள் விற்பனை செய்ய முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் மூலம் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

அதன்படி, உழவா்கரை நகராட்சிப் பகுதிகளிள் ஜூலை 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த கடைகளிடம் ரூ.3.05லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.