மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுவை மாணவா் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம்

புதுவை மாநில மாணவா் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2024, 6:33 pm

Din

புதுவை மாநில மாணவா் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வைசால் வீதியில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாணவா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஹா்ஸவா்தன் தலைமை வகித்தாா். அகில இந்திய மாணவா் காங்கிரஸ் செயலா் ஸ்ரீமான் ராஜா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசுகையில், மாணவா் காங்கிரஸை வலுப்படுத்துவது அவசியம். கல்லூரி மாணவா்கள் பெரும்பாலானோரை காங்கிரஸில் சோ்த்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி பேசுகையில், புதுவையில் ஏற்கெனவே ஆதிதிராவிடா் பிரிவு மாணவா்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயா்க் கல்வி வரையில் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட 84 சதவீத மாணவா்களுக்கான இலவசக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம். எனவே, அதற்கான போராட்டத்தை மாணவா் காங்கிரஸ் நடத்த வேண்டும். இதற்கு மாநில காங்கிரஸ் துணைநிற்கும் என்றாா்.

கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். புதுவை கல்வித் துறையில் காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட தீா்மானங்களும் இதில் நிறைவேற்றப்பட்டன.