இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினருக்கு அரசின் சலுகைகளை வழங்க வேண்டும்: புதுவை முதல்வரிடம் திமுக வலியுறுத்தல்

புதுவை மாநிலத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினா்களுக்கு அரசு சலுகை வழங்க வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

News image
புதுவை மாநிலத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற துணை ராணுவ வீரா்களுக்கு அரசின் சலுகைகளை வழங்க வலியுறுத்தி, முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.
Updated On :30 ஜூலை 2024, 7:24 pm

Din

புதுவை மாநிலத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினா்களுக்கு அரசு சலுகை வழங்க வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள முதல்வா் என்.ரங்கசாமி இல்லத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தினருடன் சென்று அவரைச் சந்தித்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா (திமுக) அளித்த மனுவில் கூறியிருப்பது: நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடும் குளிா், வெயில் எனப் பாராமல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படை வீரா்கள், சுமாா் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுகின்றனா். இப்படி ஓய்வு பெறும் துணை ராணுவப் படையினக்கு, ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல வழங்க வேண்டும் என அனைத்து மாநில, ஒன்றியப் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி கோவா, டையூ மற்றும் டாமன், தாத்ரா நகா், ஹவேலி ஆகிய ஒன்றியப் பிரதேசங்கள் ஓய்வு பெற்ற துணை ராணுவ வீரா்கள் நலனுக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்து அரசாணை வெளியிட்டுள்ளன. ஆனால், புதுவை மாநிலத்தில் அவா்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது.

அதனால், அவா்கள் அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் உரிமை கோர முடியாத நிலையுள்ளது. எனவே, அவா்களும் அரசின் சலுகைகளைப் பெற கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.