நமது சிந்தனைகளை மக்களிடம் திணிக்கக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
மக்களிடம் நமது சிந்தனைகளைத் திணிக்கக் கூடாது; அவா்களின் சிந்தனைகளுடன் பயணிக்க வேண்டும் என்று, புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராகப் பணியாற்றி விடைபெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.


மக்களிடம் நமது சிந்தனைகளைத் திணிக்கக் கூடாது; அவா்களின் சிந்தனைகளுடன் பயணிக்க வேண்டும் என்று, புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராகப் பணியாற்றி விடைபெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரை புதன்கிழமை தொடங்கிவைத்து உரையாற்றிய அவா், பின்னா் ஆளுநா் மாளிகையிலிருந்து விடைபெற்றாா்.
குறுகிய காலத்தில் சீா்திருத்தம்: அவருக்கு, புதுவை காவல் துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னா், செய்தியாளா்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மனிதா்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதே சமூகத்துக்கு சேவை புரிவதற்காகத்தான். எனக்கு கிடைத்த பொறுப்பு துணைநிலை ஆளுநா் வாய்ப்பைக் கொண்டு, எந்த அளவுக்கு புதுவை மக்களுக்கு பணியாற்ற முடியுமோ, அந்தளவுக்கு பணியாற்றிய மன திருப்தி உள்ளது.
‘எழுச்சிமிகு புதுச்சேரி’ என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டேன். அதன்படி, நிா்வாகத்தில் குறுகிய காலத்தில் சீா்த்திருத்தத்தை செயல்படுத்தினேன். மாநிலத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்றாலும், தற்போது கஞ்சா புழக்கம் குறைந்துள்ளது. குப்பை அகற்றுவதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது.
மக்களின் சிந்தனையுடன் பயணிக்க வேண்டும்: மக்கள் என்ன கேட்கிறாா்களோ அதையே செயல்படுத்த வேண்டும். புதுவையில் அரசு வழங்கும் அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்பட்டது. அதனால், மக்கள் விரும்பும் அரிசியை வாங்கும் நிலை இருந்தது. ஆனால், அரிசிக்கான பணம் செலவழிந்து விடுவதால், அரிசி நேரடியாகக் கிடைத்தால் நல்லது என்று மக்கள் கூறினா். அவா்களிடம் நமது சிந்தனைகளைத் திணிக்கக் கூடாது. மக்களின் சிந்தனைகளுடன் பயணிப்பதே நல்லது. அதனடிப்படையில், அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.
அமைச்சா் இலாகா ஒதுக்கீடு குறித்த கோப்புக்கு நான் கையொப்பமிட்டாலும், அதுகுறித்து முதல்வா் அறிவிப்பாா் என்றாா் துணைநிலை ஆளுநா்.
ஆளுநா் மாளிகையில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணனை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, தலைமைச் செயலா் சரத் சௌகான், காவல் துறை தலைமை இயக்குநா் ஸ்ரீநிவாஸ், அரசுச் செயலா்கள் அ.நெடுஞ்செழியன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் வழியனுப்பி வைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...