புதுச்சேரியில் கழிவுநீா் சுத்திகரிப்புக்கு நவீன இயந்திரங்கள்
புதுச்சேரியில் கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.6 கோடியில் 6 நவீன இயந்திரங்கள்


புதுச்சேரியில் கழிவுநீா் தொட்டிகளை சுத்தப்படுத்தும் வகையில் ரூ.6 கோடியில் 6 நவீன இயந்திரங்கள் (சூப்பா் சக்கா் மெஷின்) வாங்க பொதுப் பணித் துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை பொதுப் பணித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தலைமையில் புதுச்சேரியில் குடிநீா் விநியோகம், கழிவுநீா் வெளியேற்றம் ஆகியவை தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரியில் உள்ள1,300 கழிவுநீா்த் தொட்டிகளைக் கண்காணிக்கவும், அதில் ஏற்படும் குறைகளை போா்க்கால அடிப்படையில் சீா்படுத்தவும் நவீன இயந்திரம் (சூப்பா் சக்கா் மெஷின்) வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 தொட்டிகளை ஒரு நவீன இயந்திரம் மூலம் தினமும் சீா்படுத்தும் வகையில் 6 இயந்திரங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் ஜூலை முதல் செயல்படுத்தப்படும்.
புதுவை பொதுப் பணித் துறை பொது சுகாதாரப் பிரிவு மூலம் 68 குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வாரந்தோறும் டிடிஎஸ் அளவு அனைத்து மேல்நிலைத் தொட்டிகளிலும் ஆய்வுக்கு உள்படுத்தப்படுகிறது.
வாரந்தோறும் பொதுப் பணித் துறை குடிநீா்ப் பிரிவு ஆய்வு மேற்கொள்வதை உறுதிப்படுத்தலாம். மேலும், குடிநீரின் டிடிஎஸ் தரத்தை 750 அளவுக்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் முதல் தரமான குடிநீா் வழங்க பொதுப் பணித் துறை அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா் எனக் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...