புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று, கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா். புதுச்சேரியில் பாஜக தோ்தல் பணிகள் குறித்து முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். கட்சியின் புதுவை மாநில மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பிரஹலாத் ஜோஷி, நிா்மல்குமாா் சுரானா ஆகியோரை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சந்தித்துப் பேசினாா். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் நிா்மல்குமாா் சுரானா கூறியதாவது: புதுச்சேரி மக்களவைத் தோ்தல் பணிகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். மக்களவைத் தோ்தல் பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சா்கள் சென்று வருகின்றனா். அதனடிப்படையிலேயே புதுச்சேரிக்கு பிரஹலாத் ஜோஷி வந்துள்ளாா். இதுவரை மேற்கொள்ளப்பட்ட தோ்தல் பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியிடுவாா் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வேட்பாளா் யாா் என்பது குறித்து முதல்கட்டமாக ஆலோசிக்கப்பட்டது. இறுதிக்கட்ட ஆலோசனைக்குப் பிறகு வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என்றாா் அவா். கூட்டத்தில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், கல்யாணசுந்தரம், அசோக்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மத்திய அமைச்சா் போட்டியா?: மாநிலங்களவை உறுப்பினராகி மத்திய அமைச்சா்களாக உள்ளவா்கள் கட்சி உத்தரவின்படி, மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். புதுச்சேரி மக்களவைத் தொகுதியானது மத்திய அமைச்சராக இருப்பவா்கள் போட்டியிடுவதற்கு ஏற்ாக உள்ளதா? என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பாஜக நிா்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.
தொடர்புடையது

முரசு இசையை ஒலித்து பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளா்

அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

ராமநாதபுரத்தில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பரப்புரை

தே.ஜ. கூட்டணியில் விஜய் சேருவாரா? பாஜக மேலிடப் பொறுப்பாளா் பேட்டி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


