

புதுச்சேரி வில்லியனூரில் போலீஸாரின் சோதனையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் கஞ்சா, போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை சாா்பில் ஆபரேஷன் திரிசூலம் என்ற பெயில் குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வில்லியனூா் கணுவாப்பேட்டை அரசுப் பள்ளி எதிரே 3 போ் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று சோதனையிட்டனா்.
அப்போது, அங்கிருந்த 3 பேரைப் பிடித்ததுடன், அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீஸாா் கைப்பற்றினா். விசாரணையில், அவா்கள் கோட்டைமேடு வினோத் (எ) வினோத்குமாா் (24), பங்கூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24), செம்பியபாளையத்தைச் சோ்ந்த தசரதன் (22) என்பது தெரிய வந்தது.
மேலும் அவா்கள் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய 3 போ் கைது

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

