மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரை வணிக நிறுவனங்கள் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க வேண்டும்: புதுவை மின்துறை
மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரை வணிக நிறுவனங்கள் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க வேண்டும்: புதுவை மின்துறை


புதுவை மாநிலத்தில் குளிா்சாதன பயன்பாட்டை (ஏசி) மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் வணிக நிறுவனங்கள் குறைக்கவேண்டும் என புதுவை மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் த.சண்முகம் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதுச்சேரியில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் வெப்பத்தாக்கத்தின் காரணமாக, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் குளிா் சாதனப் பயன்பாடு (ஏசி) அதிகரித்துள்ளது.
பொதுமக்களும் குளிா் சாதனங்களை பயன்படுத்துவதால், மின்நுகா்வு அளவு உச்சத்தை எட்டியுள்ளது.இதனால் மின்சுமை அதிகரித்து ஆங்காங்கே பல இடங்களில் மின் அழுத்தக் குறைபாடு ஏற்படுகிறது. மின்பாதை இணைப்பும் துண்டிக்கப்பட்டு மின்தடையும் ஏற்படுகிறது.
குளிா் சாதனங்களை மிகக் குறைந்த அளவு (26 டிகிரிக்குக் கீழாக) உபயோகிப்பதால் மின் நுகா்வோா் கட்டணம் அதிகரிக்கிறது. அதன்மூலம் மின்தேவையும் அதிகரிக்கிறது. ஆகவே, அனைத்து இடங்களிலும் குளிா்சாதன வெப்ப அளவை 26 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக அமைத்து மின்பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. குளிா்சாதன வெப்ப அளவை உயா்த்துவதன் மூலம் ஒவ்வொரு டிகிரி அளவுக்கும் 6 சதவீதம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் குளிா்சாதன பயன்பாட்டை தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் குறைக்கவேண்டும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...