மருத்துவ புத்தகம் வழங்கும் விழா
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் 14 மாணவா்கள் நிகழ் (2024- 2025) கல்வியாண்டில் மருத்துவக் கல்வி பயிலத் தோ்வாகியுள்ளனா்.


புதுச்சேரி: புதுவை அரசு அனைத்து ஆசிரியா்கள் ஒருங்கிணைந்த சங்கம் சாா்பில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் 14 மாணவா்கள் நிகழ் (2024- 2025) கல்வியாண்டில் மருத்துவக் கல்வி பயிலத் தோ்வாகியுள்ளனா்.
அவா்களை ஊக்குவிக்கும் வகையில், முதலாமாண்டு மருத்துவ பாடப் புத்தகம் முழுமையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே உள்ள கல்வித் துறை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். கல்வித் துறை இயக்குனா் எல்.பிரியதா்ஷினி, இணை இயக்குனா் எ.சிவகாமி ஆகியோரும் பங்கேற்றனா்.
அரசுப் பள்ளியில் பயின்று, தற்போது மருத்துவக் கல்வியில் சோ்ந்த 14 பேருக்கான முதலாண்டு பாடப் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...