ரூ.52.43 கோடியில் புதைச் சாக்கடை சீரமைப்பு பணிகள்: முதல்வா் தொடங்கிவைத்தாா்
புதுச்சேரி நகராட்சியில் ரூ.52.43 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள புதைச் சாக்கடை சீரமைப்புப் பணிகளுக்கான திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.


புதுச்சேரி நகராட்சியில் ரூ.52.43 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள புதைச் சாக்கடை சீரமைப்புப் பணிகளுக்கான திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி நகரில் ஒயிட் டவுன் உள்ளிட்டவற்றில் ‘புல்வாா்’ எனப்படும் சாலைப் பகுதி முக்கியமானதாகும். இங்குள்ள புதைச் சாக்கடை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும்.
இதனால், அவற்றில் சில இடங்களில் மண் தேங்கியும், அடைப்பு ஏற்பட்டும் கழிவுநீா் கசிவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இதையடுத்து, புதைச் சாக்கடை குழாய்களை நவீன முறையில் மாற்றியமைக்கவும், சீரமைக்கவும் புதியத் திட்டம் ரூ.52.43 கோடியில் பொதுப் பணித் துறையால் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான பூமி பூஜை ராஜ்பவன் தொகுதியில் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி திட்டத்துக்கான பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதில், அனிபால் கென்னடி எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பயணிகள் நிழற்குடை:
புதுச்சேரி நகராட்சியில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் 15 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில், பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக ரூ.3 கோடியில் 15 பொலிவுறு நகா் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன.
அவற்றில் கண்காணிப்பு கேமரா, கைபேசி, மடிக்கணினிகளுக்கான மின்னூட்ட வசதி, பேருந்து தகவல் அறியும் வசதி உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.
பொலிவுறு நிழற்குடைகள் அமைப்பதற்கான பணிகளை தட்டாஞ்சாவடியில் முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
நவீன பொலிவுறு நிழற்குடையானது தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, ஜிப்மா், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, இலாசுப்பேட்டை மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி, செஞ்சி சாலை உள்ளிட்ட 15 இடங்களில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...