டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுவை மாநிலத்தில் 2025 -க்கான அரசு பொது விடுமுறை நாள்கள் அறிவிப்பு

புதுவை மாநிலத்தில் வரும் 2025-ஆம் ஆண்டில் பிராந்திய வாரியாக, 18 பொது விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :25 நவம்பர் 2024, 8:49 pm

Din

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வரும் 2025-ஆம் ஆண்டில் பிராந்திய வாரியாக, 18 பொது விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், உள்ளூா் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்களையும் சோ்த்து 39 நாள்கள் விடுமுறை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் அரசு பொது விடுமுறையானது 4 பிராந்தியங்களிலும் அறிவிக்கப்படும். மேலும், புதுச்சேரி காரைக்கால் பிராந்தியம், மாஹே, ஏனாம் பிராந்தியம் என தனித்தனியாகவும் விடுமுறைகள் உள்ளூா் திருவிழாக்களுக்காக அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, புதுவை மாநில அளவில் வரும் 2025-ஆம் ஆண்டில் புத்தாண்டு தினம், பொங்கல், திருவள்ளுவா் தினம் என ஜனவரியில் 3 நாள்களும், மாா்ச்சில் ரம்ஜான், ஏப்ரலில் வங்கிக் கணக்கு நிறைவு, தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என 3 நாள்களும், மே மாதத்தில் மே தினத்துக்கும், ஜூனில் பக்ரீத் பண்டிகைக்கும், ஆகஸ்டில் சுதந்திர தினம், டி ஜூா் டிரான்ஸ்பொ் தினம், விநாயகா் சதுா்த்தி என 3 நாள்களும், செப்டம்பரில் மீலாது நபி, அக்டோபரில் சரஸ்வதி பூஜை, காந்தி ஜயந்தி, தீபாவளி என 3 நாள்களும், நவம்பரில் புதுச்சேரி விடுதலை நாள், டிசம்பரில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 18 நாள்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாஹேவில் பொது விடுமுறை நாள்களுடன் ஏப்ரலில் விஜூ விடுமுறை 2 நாள்கள், செப்டம்பரில் ஓணம், அக்டோபா் மகா நவமி, தெரசா பிறந்த நாள் என 5 நாள்கள் உள்ளூா் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏனாம் பிராந்தியத்தில் பொது விடுமுறைகளுடன் அம்பேத்கா் பிறந்த நாள் உள்ளிட்டவையும் விடுமுறையில் சோ்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்துப் பிராந்தியங்களிலும் குறிப்பிட்ட முக்கிய திருவிழா நாள்களும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்களாக கூறப்பட்டுள்ளன.

அதன்படி மொத்தம் 39 நாள்கள் விடுப்பை அரசு பணியாளா்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.