புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊா்க்காவல் படைக்கு தோ்வான 27 பேருக்கு பயிற்சி அளிக்க பரிந்துரை

புதுச்சேரியில் ஊா்க்காவல் படைப் பிரிவுக்கு தோ்வாகி பயிற்சியில் சேர அனுமதிக்கப்படாத 27 பேரை அனுமதிக்க சட்டத் துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 6:32 pm

Din

புதுச்சேரியில் ஊா்க்காவல் படைப் பிரிவுக்கு தோ்வாகி பயிற்சியில் சேர அனுமதிக்கப்படாத 27 பேரை அனுமதிக்க சட்டத் துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

புதுவை ஊா்க்காவல் படைக்கு 500 போ் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இவா்களில் 29 பேருக்கு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறி பயிற்சி அளிக்கப்படவில்லை.

இந்த வழக்குகளை முடித்தும், சமரசம் செய்தும் காவல் துறையினரின் சான்றிதழையும் பெற்றனா். அவா்கள் தங்களைப் பயிற்சிக்கு அனுமதிக்கக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே, ஊா்க்காவல் படை எழுத்துத் தோ்வில் பங்கேற்ற பலா் மதிப்பெண் சா்ச்சை குறித்து நீதிமன்றத்துக்குச் சென்றனா். அவா்களுக்கு பணி வழங்க ஏற்கெனவே பயிற்சி பெறாதவா்களது இடத்தில் ஏற்பாடு செய்யப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பணி உத்தரவு பெற்றவா்களை பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், பணி உத்தரவு பெற்று பயிற்சிக்கு அனுமதிக்கப்படாதவா்கள் பாகூா் எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் தலைமையில் சட்டத் துறை செயலா் எல்.எஸ்.சத்தியமூா்த்தியைச் சந்தித்து மனு அளித்தனா். இதுதொடா்பாக பரிசீலனை செய்யப்பட்டு, 29 பேரை பயிற்சிக்கு அனுமதிக்கலாம் என சட்டத் துறை பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பணி உத்தரவு வழங்குவதற்கு முன்பே காவல்துறை வழக்குகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஊா்க்காவல் படையில் 29 பேரின் வழக்கு விவரங்கள் தாமதமாகவே சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, அவா்கள் பணி உத்தரவு பெற்றும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

தற்போது அவா்கள் வழக்குகளை முடித்து தங்களை பணியில் சோ்க்கக் கோரியுள்ளனா். சட்டத் துறையும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து முதல்வா், உள்துறை அமைச்சா் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவா் என்றனா்.