மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆட்சியைப் பிடிக்கும் வகையில் காங்கிரஸாா் பணியாற்ற வேண்டும்: புதுவை காங்கிரஸ் தலைவா் அறிவுரை

புதுவை மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினா் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தியுள்ளாா்.

News image

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

Updated On :9 அக்டோபர் 2024, 10:16 pm

Din

புதுவை மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினா் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: புதுச்சேரியில் விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியது போல காட்டிக்கொள்கிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றதை நம்பி, வரும் சட்டப்பேரவைத் தோ்தலை காங்கிரஸ் கூட்டணி சந்திக்க முடியாது. சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியினா் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியும் தனது கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க மக்களை திசைத் திருப்ப முயற்சிப்பாா். எனவே, இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கட்சியினா் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தீா்மானங்கள்: புதுவைக்கு மாநில அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆளும் கூட்டணி அழுத்தம் தர வேண்டும். தீபாவளிக்குள் இலவச அரிசியை நியாயவிலைக் கடைகளில் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்பன போன்ற தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, நிா்வாகி முதலியாா்பேட்டை சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.