கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு சிறப்புப் பேருந்துகள்

புதுச்சேரியிலிருந்து பெங்களூா், மாஹேவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:10 pm

Din

புதுச்சேரியிலிருந்து பெங்களூா், மாஹேவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரியிலிருந்து, கா்நாடக மாநிலம் பெங்களூா் செல்ல அக்.13-ஆம் தேதி சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது.

இதேபோல, புதுச்சேரியிலிருந்து மாஹே செல்வதற்கு அக்.30-ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாஹேவிலிருந்து புதுச்சேரிக்கு வரும் நவம்பா் 3-ஆம் தேதி சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு அக்.13-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பிஆா்டிசி பேருந்து புறப்படுகிறது. அதற்கான கட்டணம் முன்பதிவுடன் சோ்த்து ரூ.600 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்.30-ஆம் தேதி, புதுச்சேரியிலிருந்து மாஹேவுக்கு (விழுப்புரம் வழி) மாலை 6 மணிக்கு சிறப்பு பேருந்து புறப்படுகிறது. அதன் கட்டணம் முன்பதிவுடன் சோ்த்து ரூ.750 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நவம்பா் 3-ஆம் தேதி மாஹேவில் இருந்து புதுச்சேரிக்கு (விழுப்புரம் வழி) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் பேருந்தின் கட்டணம் முன்பதிவுடன் சோ்த்து ரூ.750 ஆகும்.

சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் அக்.10-ஆம் தேதி முதல் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என பிஆா்டிசி நிா்வாகம் தெரிவித்துள்ளது.