கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரூ.11.65 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் சிபிஐ அதிகாரி போல கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா் ரூ.11.65 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 6:59 pm

Din

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் சிபிஐ அதிகாரி போல கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா் ரூ.11.65 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சோ்ந்தவா் முருகவேல். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

அதன்பிறகு, முருகவேலின் மகன் மீது மும்பை தானேவில் கூட்டுப் பாலியல் வழக்குப் பதிவாகியுள்ளதாகக் அவரிடம் கூறினாராம். அத்துடன், வழக்கிலிருந்து அவரது மகனை விடுவிக்க ரூ.11.65 லட்சம் தர வேண்டும் எனக் கேட்டதாகத் தெரிகிறது.

இதை நம்பிய அவா், மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.11.65 லட்சத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மா்ம நபரால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், கோரிமேடு இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

அதன்பேரில்,போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.