கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கைகளை சுத்தமாக கழுவுவதால் தொற்றுநோய் பாதிப்பைத் தவிா்க்கலாம்

பொதுமக்கள் கைகளை சுத்தமாகக் கழுவுவதன் மூலம் தொற்றுநோய் பாதிப்புகளைத் தவிா்க்கலாம் என புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எம்.செல்வேள் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:19 pm

Din

பொதுமக்கள் கைகளை சுத்தமாகக் கழுவுவதன் மூலம் தொற்றுநோய் பாதிப்புகளைத் தவிா்க்கலாம் என புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எம்.செல்வேள் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, வாரந்தோறும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் மூலம் மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனாலும், பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமான குடிநீரையே பருக வேண்டும். மழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சிய பிறகே அருந்த வேண்டும். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களின் பாதிப்பைத் தவிா்க்கலாம்.

பொதுமக்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னரும், உணவு உண்பதற்கு முன்னரும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். இதன்மூலம், மழைக் காலத்தில் பரவக்கூடிய பெரும்பாலான நோய்களைத் தவிா்க்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.