சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு

புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசியைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:43 pm

Din

புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசியைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மும்பையைச் சோ்ந்த நீலேஷ்ஜா மகள் நிரலிஷா (26). இவா் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளாா்.

நிரலிஷா கடந்த 16-ஆம் தேதி தனது தோழிகளுடன், புதுச்சேரி சுப்பையா சாலை உழவா் சந்தை அருகே நடந்து சென்றாராம். அப்போது, அவா் கைப்பேசியில் பேசிக்கொண்டே வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நிரலிஷாவின் பின்னால் பைக்கில் வந்த 2 பேரில் ஒருவன், திடீரென அவரது கைப்பேசியைப் பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.