வீடு தேடிச் சென்று இலவச அரிசி வழங்க பரிசீலனை: துணைநிலை ஆளுநா்

புதுவை மக்களின் இலவச அரிசி திட்ட நியாயத்தை புரிந்து பிரதமா் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளாா்.
Published on

புதுச்சேரி: புதுவை மக்களின் இலவச அரிசி திட்ட நியாயத்தை புரிந்து பிரதமா் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளாா். அரிசியை வீடுகள் தேடிச்சென்று சோ்க்கவும் பரிசீலிக்கப்படுகிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுவை மக்களின் வாழ்க்கையோடும், வாழ்வாதாரத்தோடும் சம்பந்தப்பட்ட கோரிக்கை என்பதால் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டோம்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து இந்தக் கோரிக்கையை விளக்கினேன். இந்த கோரிக்கையின் நியாயத்தை பிரதமா் ஏற்று, உடனே அனுமதி தந்தாா்.

நியாயவிலைக் கடைகள் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பரிசாக மாநில அரசின் இலவச அரிசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வீடு தேடி இலவச அரிசியைக் கொண்டு சோ்க்கவும் பரிசீலிக்கப்படுகிறது. முதல்வரிடம் பேசி அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து செயல்படுத்தப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com