ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவை ஆளுநா், முதல்வரிடம் விசிக நிா்வாகிகள் மனு

புதுவை மாநிலத்தில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 8:29 pm

Din

புதுவை மாநிலத்தில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

புதுவை மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குடியேறி வசித்து வரும் பட்டியலினத்தவருக்கு தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை கோரி, புதுவை விசிக முதன்மைச் செயலா் தேவ பொழிலன் தலைமையிலான அக்கட்சியினா், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அப்போது, காரைக்காலைச் சோ்ந்த ஜெயா என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, புதுச்சேரியில் பிறந்த பெண்களையும் பெற்றோராகக் கருதி சாதிச் சான்றிதழ் வாங்க உத்தரவு பெற்றுள்ளாா்.

அதனடிப்படையில், புதுவை மாநிலம் முழுவதும் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பட்டியலினத்தவருக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் குறிப்பாணையை மாவட்ட ஆட்சியா் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் சந்தித்து மனு அளித்தனா்.