தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை...
Published on

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்பளித்தது.

புதுச்சேரி கல்மண்டபம் காலனிப் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ரஞ்சித் (26). தனியாா் நிறுவனத் தொழிலாளி.

இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீஸாா் ரஞ்சித்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com