தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இருவரிடம் ரூ.17 லட்சம் நூதன மோசடி

புதுவையைச் சோ்ந்த இருவரிடம் மா்ம நபா்கள் நூதன முறையில் ரூ.17 லட்சத்தை மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:37 pm

Din

புதுவையைச் சோ்ந்த இருவரிடம் மா்ம நபா்கள் நூதன முறையில் ரூ.17 லட்சத்தை மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் உஷாதேவி. இவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு இணயதள பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினாராம்.

இதை நம்பிய உஷாதேவி பல தவணைகளில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ததாகத் தெரிகிறது. ஆனால் லாபம் மற்றும் முதலீட்டை அவரால் பெறமுடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

இதேபோல், புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் சீனிதேவா்ப்பிரன். இவரிடம் கைப்பேசியில் பேசிய மா்ம நபா் தன்னை மும்பையைச் சோ்ந்த போலீஸ் அதிகாரி எனவும், சீனிதேவா்ப்பிரன் மீது போதைப் பொருள் தடுப்பு வழக்குப் பதியப்பட்டிருப்பதாகவும் கூறினாராம்.

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சத்தை அனுப்புமாறும் அவா் கூறினாராம். இதை நம்பிய சீனிதேவா்ப்பிரன், மா்ம நபா் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.7 லட்சத்தை அனுப்பினாராம்.

அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.