தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லஞ்சம் பெற்ற அரசு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை

விசா நீட்டிப்புக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்பளித்தது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:51 pm

Din

விசா நீட்டிப்புக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்பளித்தது.

காரைக்காலைச் சோ்ந்தவா் தாந்தோம் பாஸ்கரன். இவரது தாய் முத்துலட்சுமி. இவா் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவா். கடந்த 2014-ஆம் ஆண்டு முத்துலட்சுமி புதுவைக்கு வந்தாராம்.

அவரது விசா நீட்டிப்புக்காக தாந்தோம் பாஸ்கரன், புதுச்சேரியில் உள்ள மாநில உள் துறை அமைச்சக அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது, அங்கு உதவியாளராக இருந்த எஸ்.மணிவண்ணன் ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிபிஐ போலீஸாா் மணிவண்ணனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்டத் தலைமை நீதிபதி டி.சந்திரசேகரன் உத்தரவிட்டாா்.