விதிமிறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற முடிவு
புதுச்சேரியில் கடற்கரை, ஆற்றங்கரையோரம் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கடற்கரை, ஆற்றங்கரையோரம் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்திய கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுக் கூட்டம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேலாண்மைக் குழுத் தலைவரான மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் குழுவின் உறுப்பினா் செயலா் ஸ்ரீநிவாச ராவ் உறுப்பினா்களை அறிமுகப்படுத்தினாா். மேலாண்மை அதிகார அமைப்பின் அதிகாரி ஜெயகுமாா், குழுவால் தடை செய்யப்பட்டவை மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கினாா்.
கூட்டத்தில், புதுச்சேரி மாவட்டத்தில் கடற்கரையில் இருந்து சுமாா் 500 மீட்டா் நிலப் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படவும், விதிமீறல் இருந்தால் அவற்றை அகற்றவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதில், புதுச்சேரி பிராந்திய நகராட்சி ஆணையா்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், மீன்வளத் துறை அதிகாரிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...