தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பொறியியல் படிப்புகளுக்கு இன்று இறுதிகட்ட கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளுக்கான இறுதிகட்ட சென்டாக் மாப் அப் கலந்தாய்வு செப்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:43 am

Din

பொறியியல் படிப்புகளுக்கான இறுதிகட்ட சென்டாக் மாப் அப் கலந்தாய்வு செப்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

புதுவையில் அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அரசு , சுயநிதி இடங்களின் விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காலியிடங்களை நிரப்ப மாப் அப் கலந்தாய்வு செப்.13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணிமண்டபம், காரைக்காலில் காமராஜா் பொறியியல் கல்லூரி, மாஹே, ஏனாமில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன.

அதன்படி, காலை 9.30 மணிக்கு ஜேஇஇ மதிப்பெண், 10.30 மணிக்கு பிற மாநிலத்து மாணவா்கள் என கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, புதுவையைச் சோ்ந்தவா்களுக்கு மாலை 6 மணி வரை கலந்தாய்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் கலந்தாய்வுக்கு முன் காலியிடங்களை பாா்வையிட்டு, அனைத்து சான்றிதழ்களுடன் வர வேண்டும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா தெரிவித்தாா்.