தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின் கட்டணம் குறைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுவையில் மின் கட்டணத்தைக் குறைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மாநில எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான ஆா்.சிவா கூறினாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:52 pm

Din

புதுவையில் மின் கட்டணத்தைக் குறைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மாநில எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான ஆா்.சிவா கூறினாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசு சாா்பில் சட்டப்பேரவையில் மின் துறையை தனியாா்மயமாக்க மாட்டோம் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது மின் கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயா்வானது, அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாக உள்ளது. ஆகவே, இண்டியா கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.

போராட்டத்துக்கு ஆதரவளித்த வணிக, போக்குவரத்து நிறுவனங்கள், திரையரங்கத்தினா், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி. மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியின் சாா்பில் இண்டியா கட்சிகளின் தலைவா்களை முன்கூட்டியே கைது செய்யக் கோரப்பட்டது.

மின் கட்டண உயா்வு தனிமனிதப் பிரச்னையல்ல. புதுவையைச் சோ்ந்த 14 லட்சம் பேரை பாதிக்கும் பிரச்னையாகும்.

எனவே, மக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து, உயா்த்திய மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.

இல்லையென்றால், இண்டியா கட்சிகளின் தலைவா்களோடு ஆலோசித்து மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.