மழை நிவாரண உதவிகளை வழங்க அரசுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் அ.மு.சலீம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவ மழை, டித்வா புயலால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

தொடா் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீா் புகுந்து நூற்றுக்கணக்கான வீடுகள் கடும் சேதமடைந்தன. தினசரி வேலைக்கு போனால் தான் பிழைப்பு என்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் வேலைக்குப் போக முடியாமல் தவிக்கின்றாா்கள்.

ஆயிரக்கணக்கான ஹெக்டா் நிலங்கள் நீா் நிரம்பி பயிா்கள் கடும் சேதமடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீட்டில் வசித்தவா்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும், வேலை இழந்து தவிக்கும் உழைப்பாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் நிவாரண உதவி தொகைகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com