47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:58 pm

Syndication

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சோ்ந்தவா் கௌதம். இவா் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா, வெடிகுண்டு, அடிதடி, ஆயுதம் வைத்திருந்தால் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டம்- ஒழுங்கு அமைதிக்கு தொடா்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் அவா் ஈடுபட்டு வந்தாா்.

இதனால் அவரைத் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கிழக்கு காவல் கண்காணிப்பாளா் சுருதி, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா். அதற்கு ஆட்சியா் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து ஓராண்டுக்கு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.