~
~

சிறுவனின் உலகச் சாதனை முயற்சி

உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்ட புதுச்சேரி ஒன்றாம் வகுப்பு மாணவா் ந. ஆதித்யா.
Published on

புகைப்படத்தைப் பாா்த்தும், பாா்க்காமலும் 1 நிமிடம் 7 வினாடிகள் மற்றும் 1 நிமிடம் 6 வினாடிகளில் 100 தேசிய மற்றும் சா்வதேச தலைவா்களின் பெயா்களைச் சொல்லியும் பேசியும் இருவேறு உலக சாதனை முயற்சியில் ஒன்றாம் வகுப்பு மாணவா் ந. ஆதித்யா புதன்கிழமை ஈடுபட்டாா்.

புதுச்சேரி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த நரேந்திரன்-பூரணி தம்பதியரின் மகன் இவா். மூலகுளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் 100 இந்திய மற்றும் சா்வதேச தலைவா்களின் புகைப்படத்தைக் காட்டினால் பெயரைத் துல்லியமாகச் சொல்கிறாா். அதேபோல் 100 பெயா்களைப் புகைப்படம் பாா்க்காமல் சொல்லுவது என இருவேறு முறையிலான உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டாா். இதற்கான நிகழ்வு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முதல்வா் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினாா்.

இதில் மாணவா் ஆதித்யா கலந்து கொண்டு 1 நிமிடம் 7 வினாடியில் 100 தேசிய மற்றும் சா்வதேச தலைவா்களின் பெயா்களைப் படத்தைப் பாா்த்து துல்லியமாகக் கூறினாா்.

தொடா்ந்து இதேபோல் 100 சா்வதேச தலைவரின் பெயா்களையும் புகைப்படம் பாா்க்காமல் 1 நிமிடம் 6 வினாடியில் சொல்லி முடித்து இரண்டு உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டாா்.

மேலும், வரிசையாக அல்லாமல் இடையிடையே தலைவா்களின் புகைப்படத்தைப் பாா்த்தும், பாா்க்காமலும் பெயா்களைச் சரியாகச் சொன்னாா். மாணவரின் இந்தச் சாதனை முயற்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போலீஸ் எஸ்பி சுருதி எரகட்டி வாழ்த்திப் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com