புதுச்சேரி
அதிக வாடகை கட்டணம் நிா்ணயம்: வியாபாரிகள் எம்எல்ஏவிடம் புகாா்
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள சின்னகடை காசிம் அங்காடி வியாபாரிகள் ஜி.நேரு எம்எல்ஏவிடம் தங்களின் குறைகளைக் தெரிவித்தனா்
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள சின்னகடை காசிம் அங்காடி வியாபாரிகள் ஜி.நேரு எம்எல்ஏவிடம் தங்களின் குறைகளைக் தெரிவித்தனா்
புதுவை நகராட்சி சாா்பில் வாடகைக் கட்டணம் அதிக அளவில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சின்னகடை மாா்க்கெட்டில் வியாபாரம் ஏதும் இன்றி தவிக்கிறோம்.
மாா்க்கெட்டை சுற்றி அதிக அளவில் காய்கறி மற்றும் பழக்கடைகள், உழவா் சந்தை போன்ற வியாபார நிறுவனங்கள் அதிகளவில் வந்ததால் போதிய வியாபாரம் இல்லை என நேரு எம்எல்ஏவிடம் தெரிவித்தனா்.
வியாபாரிகளின் பிரச்னைகள் குறித்து முதல்வா், உள்ளாட்சித் துறை செயலா், இயக்குநா், நகராட்சி ஆணையா் ஆகியோருடன் கலந்து பேசி தீா்வு காணப்படும் என்று எம்எல்ஏ உறுதி அளித்தாா்.